UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவுக்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட திட்டப் பகுதிகளில் விற்பனையாகாத பொது மனைகள், தொழிற்கூட மனைகள், பள்ளி மனைகள், மதஉபயோக மனைகள் என 87 மனைகளுக்கு மின்னணு ஏலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் தோப்பூர் துணைக் கோள் நகரத்திற்குட்பட்ட உச்சப்பட்டி பகுதியில் 1 – 6, 8, தோப்பூர் பகுதியில் 3, 5 மனைகளுக்கு இணைய தளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு அக்.9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, https://tnhb.tn.gov.in மற்றும் http://tntenders.gov.in ல் தெரிந்து கொள்ளலாம் என, செயற்பொறியாளர்கள் பழனிகுமார், பாலமுருகன் தெரிவித்துள்ளனர்.
