ADDED : ஏப் 04, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சிவகாசி விஸ்வநத்தம் கிஷோர் 19, மயிலாடுதுறை -- செங்கோட்டை ரயிலில் பயணித்தார். கள்ளிக்குடி ஸ்டேஷன் அருகே அவரது ஒரு பவுன் தங்கச் செயினை உடன் பயணித்த மதுரை சுந்தரராஜபுரம் சுர்ஜித் 32, பறித்துத் தப்பினார்.
அவரை இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.

