ADDED : அக் 31, 2025 01:53 AM
மதுரை:  பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு ஹேண்ட்பால் போட்டிகள் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியிலும் வாலிபால் போட்டிகள் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளியிலும் நடந்தன.
14 வயது பிரிவுக்கான இறுதிப் போட்டியில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளி  6 -- 4 என்ற கோல் கணக்கில் மகாத்மா பாபா பள்ளியை வீழ்த்தியது.  கே.புளியங்குளம் கேரன் பள்ளி மூன்றாம் இடம், திருநகர் சி.எஸ்.ஆர். பள்ளி 4ம் இடம்பெற்றன. 17 வயது பிரிவில் தனபால் பள்ளி 13 -- 10 என்ற கோல் கணக்கில் சி.எஸ்.ஆர். பள்ளியை வீழ்த்தியது. லார்டு வெங்கடேஷ்வரா பள்ளி 3ம் இடம்,  அலங்காநல்லுார் தாய் பள்ளி 4ம் இடம்பெற்றன.
19 வயது பிரிவில் தனபால் பள்ளி 12 -- 6 என்ற கோல் கணக்கில் சி.எஸ்.ஆர். பள்ளியை வீழ்த்தியது. மகாத்மா பள்ளி 3ம் இடம், லார்டு வெங்கடேஷ்வரா பள்ளி 4ம் இடம்பெற்றன.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், பயிற்சியாளர் குமரேசன், மதுரை மாவட்ட ஹேண்ட்பால் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், மதர் குளோப்  அகாடமி தலைவர் அன்பரசன் பாராட்டினர்.  உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், குமார், ராஜேஷ், லட்சுமணன் செய்தனர்.
வாலிபால் போட்டி ஆடவர் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் பிரிவு வாலிபால் போட்டியில் சாப்டூர் அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது.
செயின்ட் மைக்கேல் பள்ளி 2ம் இடம், பாலமேடு அரசுப் பள்ளி 3ம் இடம், திருவாதவூர் லட்சுமி பள்ளி 4ம் இடம் பெற்றன.
17 வயது பிரிவில் சேதுபதி பள்ளி முதலிடம் பெற்றது. சி.இ.ஓ.ஏ., பள்ளி 2ம் இடம், வெள்ளையம்பட்டி அரசுப் பள்ளி 3ம் இடம், கல்யாணி பள்ளி 4ம் இடம் பெற்றன.
19 வயது பிரிவில் சத்திரப்பட்டி அரசுப்பள்ளி முதலிடம் பெற்றது. பாலமேடு பி.எச்.என்.யு.எஸ்.பி. பள்ளி 2ம் இடம், வி.எச்.என். பள்ளி 3ம் இடம், லார்டு வெங்கடேஸ்வரா பள்ளி 4ம் இடம் பெற்றன.

