ADDED : நவ 07, 2025 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: அழகர் கோவில் சுந்தரராஜா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான 14 -19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் நடந்தன.
14 வயது மகளிர் பிரிவில் சுந்தரராஜா, புளியங்குளம் அரசு பள்ளி, செயின்ட் ஜோசப், அத்திப்பட்டி ஆர்.எம்.எஸ்., பள்ளிகள் முதல் 4 இடங்களை வென்றன. 17 வயது மகளிர் பிரிவில் சுந்தர ராஜா, செயின்ட் ஜோசப், புளியங்குளம் அரசு பள்ளி, நிர்மலா மேல்நிலைப் பள்ளிகள் முதல் 4 இடங்களை வென்றன. 19 வயது மகளிர் பிரிவில் நிர்மலா, சென் ஜோசப், சுந்தரராஜா, கேப்ரன்ஹால் பள்ளிகள் முதல் 4 இடங்களை வென்றன.
வெற்றி பெற்றவர்களை கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், சுந்தரராஜா பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் உள்ளிட்டோர் பாராட்டினர்.

