sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிலையூர் விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் கால்வாய் சீரமைப்பால் மகிழ்ச்சி

/

நிலையூர் விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் கால்வாய் சீரமைப்பால் மகிழ்ச்சி

நிலையூர் விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் கால்வாய் சீரமைப்பால் மகிழ்ச்சி

நிலையூர் விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம் கால்வாய் சீரமைப்பால் மகிழ்ச்சி


ADDED : நவ 04, 2025 04:19 AM

Google News

ADDED : நவ 04, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர், மழைநீர் செல்லும் நிலையூர் கால்வாய் ரூ. 6.50 கோடியில் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதன்மூலம் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் வட்டார கண்மாய்கள், பெருங்குடி கண்மாய், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் போன்றவற்றுக்கு நிலையூர் கால்வாய் மூலம் வைகை அணை நீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய்க்குள் விளாச்சேரியில் இருந்து சந்திரா பாளையம் வரை கழிவுகள் கொட்டப்படுகின்றன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் விடப்படுகிறது. நீர்வரத்து இல்லாத மாதங்களில் கால்வாயில் கழிவு நீர், குப்பை தேங்குகிறது. விளாச்சேரி - பெருங்குடி இடையே கால்வாயில் பல இடங்களில் உயரம் குறைவாக உள்ளதால் தண்ணீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்கிறது.

இதற்கு தீர்வு காண நீர்வளத்துறை சார்பில் நிலையூர் கால்வாயில் பணிகள் நடந்தன. பெருங்குடி வரை வலுவிழந்த பகுதி, தண்ணீர் வெளியேறி வீணாகும் பகுதியில் சிமென்ட் தடுப்புச் சுவர், குப்பை கொட்டுவதை தடுக்க கால்வாய் பக்கவாட்டு சுவரில் 3 அடி உயர சிமென்ட் சுவர், அதன் மேல் 6 அடி உயர வலை அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

ஐம்பதாண்டு கோரிக்கை பெருங்குடி பெரிய கண்மாய், வண்ணான்குளம், இரட்டைக்குளம், நெடுங்குளம் கண்மாய் நீர் பாசன சங்க தலைவர் பெரிய கருப்பு ராஜா, ஆரியங்குளம் கண்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: கண்மாய்களில் சேதம் அடைந்துள்ள ஷட்டர்கள் சீரமைக்கப்பட உள்ளது. கால்வாயில் சேதம் அடைந்த பக்கவாட்டுச் சுவர்கள், உயரம் குறைவான பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப் பட்டுள்ளன.

அனைத்து மதகுகளும் சீரமைக்கப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளன. நீர்வரத்து காலங்களில் நெடுங்குளம் பாசன நிலங்களுக்கு உரம், இடுபொருள் கொண்டு செல்ல வழி இருக்காது. தண்ணீரை நிறுத்திய பின்பே கால்வாய்க்குள் இறங்கி சென்றோம். அங்கு தரைப்பாலம் கட்ட வேண்டும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தினோம்.

தற்போது நெடுங்குளம் கண்மாய் அருகே நிலையூர் கால்வாயில் தரைப்பாலம் கட்டப்படுகிறது. பெருங்குடி பெரிய கண்மாயில் 2 மடைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, நான்கு ஷட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. நிலையூர் கால்வாய் சீரமைக்கப்படுவதால், வரும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் அனைத்து கன்மாய்களும் விரைவில் நிரம்பும்.

முன்பு நிலையூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டாலோ, தண்ணீர் வெளியேறினாலோ, முள்ளிப்பள்ளத்தில் தண்ணீரை அடைத்து, சேதமடைந்த பகுதியை சீரமைப்பர். பலநாட்களுக்குப் பின் இப்பணி முடிந்ததும் தண்ணீர் திறப்பர். பலசமயங்களில் சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் முன்பே தண்ணீர் நிறுத்தப்பட்டதும் உண்டு. இதனால் பல ஆண்டுகள் கண்மாய்கள் முழுமையாக நிரம்ப வில்லை. கால்வாய் சீரமைப்பால் இனி அப்பிரச்னை ஏற்படாது என்றனர்.






      Dinamalar
      Follow us