UPDATED : நவ 04, 2026 11:00 AM
ADDED : நவ 04, 2026 10:57 AM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: மதுரையிலிருந்து உசிலம்பட்டி வழியாக தேனி, கம்பம் மற்றும் வத்தலக்குண்டு, திருமங்கலம், பேரையூர் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் தனியார், அரசு பஸ்களில் கூடுதல் ஒலி எழுப்பும் ஹாரன்களை இணைத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்கள் மற்றும் ரோட்டில் வரும் மற்ற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் ஒலி எழுப்புகின்றனர் என தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை 6:00 மணியளவில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையில், போக்குவரத்து எஸ்.ஐ., சவுந்தரபாண்டி மற்றும் போலீசார் பஸ்ஸ்டாண்ட் முன் இதுதொடர்பாக சோதனை நடத்தினர். அதிக ஒலி எழுப்பியபடி வந்த தனியார் பஸ்களில் இருந்த ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.
