sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முழங்கால் வலியால் வாழ்க்கை சுமையாகிவிட்டதா

/

முழங்கால் வலியால் வாழ்க்கை சுமையாகிவிட்டதா

முழங்கால் வலியால் வாழ்க்கை சுமையாகிவிட்டதா

முழங்கால் வலியால் வாழ்க்கை சுமையாகிவிட்டதா


ADDED : ஜூன் 30, 2025 03:02 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முழங்கால், இடுப்பு, கழுத்து போன்ற மூட்டுகளில் வலி, வீக்கம், விறைப்பு வந்துவிட்டால், அது 'சந்திகத வாதம் (ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்) எனப்படும் ஒரு வகை மூட்டு நோயாக இருக்கலாம். இது வயதானவர்கள் மட்டுமல்ல, 35 வயதுக்கு மேற்பட்ட நடுத்தர வயதினருக்கும் வர வாய்ப்பு அதிகம். இதற்கு காரணம் அதிக உடல் எடை, உடல் இயக்கம் குறைவு, மூட்டுகளில் காயம், மரபு காரணங்கள், சீரில்லாத உட்காரும் பழக்கம்.

பொதுவான அறிகுறிகள்:


மூட்டுகளில் வலி, வீக்கம், மூட்டுகள் சிவந்து போதல், நகர்வதில் சிரமம், சத்தம், விறைப்பு, நெகிழ்வுத்தன்மை குறைவு.

இந்த வலிக்கு தீர்வு இருக்கிறதா என்றால் ஆமாம். ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்ம சிகிச்சை, இயற்கையான முறையில் வாதத்தைக் குறைத்து, மூட்டுகளை நலமாக வைத்திருக்க உதவுகிறது.

பஞ்சகர்ம சிகிச்சையில், எண்ணெய் சிகிச்சை உடலுக்கு உள்ளும் புறமும் எண்ணெய் பிரயோகிக்கப்படும். மூலிகை எண்ணெயால் முழு உடலும் மசாஜ் செய்யப்படும். வாதத்தை குறைக்கும் சூடான மூலிகைப் பேஸ்ட். மளிகைப் பொடி மசால் மூலம் ரத்த ஓட்டம் மேம்படும்.

சூடான வாதம் மூலம் வலி குறைய உதவுகிறது. மூலிகை கஷாயம் உடலில் ஊற்றப்படும் சிகிச்சை. சூடான மணலால் வலி குறைக்கும் சிகிச்சை. பிழிச்சில் எண்ணெய் குளியல் மூலம் வாதம் குறைக்கும் மசாஜ், முழங்காலுக்கு எண்ணெய் ஊற்றி ஊறவைக்கும் சிகிச்சை, உடலை உள்ளிருந்து சுத்தம் செய்யும் சிகிச்சைமுறை, மூலிகை மருந்துகளால் எனிமா கொடுத்து மூட்டுகளை இயங்க வைக்க உதவும் சிகிச்சை என வாழ்க்கை முறையை மாற்றி வாதத்தை கட்டுப்படுத்தலாம்.

உடல் எடையை கட்டுப்படுத்துங்கள்


தினமும் உடல் பயிற்சி செய்யுங்கள். தினமும் 30 நிமிடம் நடந்தாலே போதும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்துங்கள். மூட்டுகளில் காயம் ஏற்படாமல் கவனியுங்கள். தவறான உட்காரும் பழக்கத்தைத் தவிருங்கள். மூட்டுகளை வலுவாக்கும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை நம்பிக்கையூட்டும் தீர்வு.

- டாக்டர் தன்வந்திரி பிரேம்வேல்

மதுரை

73737 07970






      Dinamalar
      Follow us