ADDED : பிப் 16, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சவுடார்பட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் தற்போது நெல் அறுவடை முடிந்து உள்ளது. அறுவடையின் போது இயந்திரங்கள் மூலம் தனியாக பிரிக்கப்பட்ட வைக்கோல் சுருட்டப்பட்டு கட்டாக கட்டி கேரளா பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு ரூ. 150 முதல் ரூ.200 வரை விலை வைத்து வைக்கோல் கட்டுக்களை வாங்கும் வியாபாரிகள் கேரளாவிற்கு கொண்டு சென்று ரூ. 300 முதல் ரூ.450 வரை விற்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களுக்கு விலை கிடைக்காத நிலையில் தற்போது ஓரளவுக்கு விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.