UPDATED : நவ 24, 2026 05:46 PM
ADDED : நவ 24, 2026 05:46 PM
அ நிறம் | அளவு
ஒத்தக்கடை:
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் 'துாய்மை கழிப்பறை -கண்ணியமான எதிர்காலம்' திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் மெர்சி தலைமை வகித்தார். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். சுகாதார ஒருங்கிணைப்பாளர் இளவரசி குப்பையை பிரிப்பது, கழிப்பறை பயன்பாட்டின் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் காவியாஸ்ரீ, ராஜா பேசினர். ஆசிரியர் முராத்பானு நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார ஊக்குநர் அங்குச்செல்வி, துாய்மைக் காவலர்கள் செய்திருந்தனர்.
