/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எரிக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
/
எரிக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 02, 2024 06:12 AM

வாடிப்பட்டி: பரவை- - அதலை ரோட்டில் கோவில்பாப்பாகுடி ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அதலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறைச்சி கழிவுகள், வாகன உதிரி கழிவு பாகங்களை வாகனங்களில் ஏற்றி வந்து ரோடு வரை கொட்டி செல்கின்றனர். யாரும் கண்டு கொள்வதில்லை.
எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் புகைமூட்டம் ஏற்பட்டு இப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. கடும் துர்நாற்றத்தால் காற்று மாசு ஏற்படுகிறது. இறைச்சி கழிவுகளுக்காகவே நாய்கள் கூட்டமாக முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

