/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுகாதார நிலையம் முன் சுகாதார கேடு: மக்கள் தவிப்பு
/
சுகாதார நிலையம் முன் சுகாதார கேடு: மக்கள் தவிப்பு
ADDED : மே 18, 2025 02:59 AM

அலங்காநல்லுார்: மதுரை மேற்கு ஒன்றியம் பொதும்பு ஊராட்சி துணை சுகாதார நிலையம் முன் தேங்கும் குப்பை, கழிவுகளால் சுகாதார கேடு, விபத்து அபாயம் உள்ளது.
அதலை ரோட்டில் துணை சுகாதார நிலையம், சித்த மருத்துவ மையம், தபால் அலுவலகம், மகளிர் குளியல் தொட்டி போன்றவை அடுத்தடுத்து உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும்கழிவுநீர் குளியல் தொட்டி முன் குளம்போல் தேங்கி புதை குழியாக மாறியுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் ரோட்டின் இருபுறமும் வடிகால் கட்டப்பட்டது.ஆனால் ரோட்டின் ஓரத்தில் தடுப்பு கட்டவில்லை.
குளியல் தொட்டிக்குபெண்கள் செல்ல பாதைஇல்லை. இந்த ரோட்டோரத்தில் சாணக் கழிவுகளை கொட்டி குவித்து வருகின்றனர். குப்பையை எரிக்கின்றனர். இந்த ரோட்டில் செல்வோர் தடுமாறினால் கழிவு நீர் கால்வாயில் விழுவது நிச்சயம்.
இந்த அவலத்தை போக்க மாவட்ட நிர்வாகம் கால்வாயை சுத்தம் செய்து, தடுப்பு அமைக்க உத்தரவிட வேண்டும்.