/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பர்கூர்மலையில் கனரக வாகனங்களுக்கு தடை; மாற்றுப்பாதைகள் அறிவிப்பு
/
பர்கூர்மலையில் கனரக வாகனங்களுக்கு தடை; மாற்றுப்பாதைகள் அறிவிப்பு
பர்கூர்மலையில் கனரக வாகனங்களுக்கு தடை; மாற்றுப்பாதைகள் அறிவிப்பு
பர்கூர்மலையில் கனரக வாகனங்களுக்கு தடை; மாற்றுப்பாதைகள் அறிவிப்பு
ADDED : ஜூன் 24, 2025 01:42 AM
ஈரோடு, கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுார் வட்டம், கொள்ளேகால் - செல்லம்பாளையம் சாலையில், 4 ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலை புனரமைப்பு பணி நடக்க உள்ளது. இதனால் வரும் ஜூலை, 5 வரை, ஆறு சக்கரத்துக்கு அதிகமான கனரக வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதித்து, சாம்ராஜ் நகர் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜூலை, 5 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள், பர்கூர் வழியாக கொள்ளேகால் செல்ல தடை உள்ளதால், மாற்றுப்பாதையில் செல்லலாம்.
இதன்படி சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்கள், மேட்டூர் கொளத்துார், மாதேஸ்வரன் மலை வழியாக கொள்ளேகாலுக்கும், அம்மாபேட்டை வழியாக வெள்ளித்திருப்பூர், அந்தியூர், அத்தாணி, சத்தியமங்கலம், பண்ணாரி வழியாக சாம்ராஜ் நகருக்கும், பவானி வழியாக வருவோர், ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பண்ணாரி வழியாக சாம்ராஜ் நகருக்கும், அந்தியூர் பகுதியில் புறப்படும் வாகனங்கள் அத்தாணி, பங்களாபுதுார், சத்தியமங்கலம், பண்ணாரி வழியாக சாம்ராஜ் நகருக்கும், பெருந்துறை மார்க்கமாக வரும் வாகனங்கள் திங்களூர், கொளப்பலுார் மாக்கினாங்கோம்பை, சத்தியமங்கலம், பண்ணாரி வழியாக சாம்ராஜ் நகர் செல்ல வேண்டும்.