sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புற்றுநோயால் பாதித்த சிறுமிக்கு உதவுங்கள்

/

புற்றுநோயால் பாதித்த சிறுமிக்கு உதவுங்கள்

புற்றுநோயால் பாதித்த சிறுமிக்கு உதவுங்கள்

புற்றுநோயால் பாதித்த சிறுமிக்கு உதவுங்கள்


ADDED : ஆக 19, 2024 08:07 AM

Google News

ADDED : ஆக 19, 2024 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாவட்டம் நிலையூர் அடுத்த கைத்தறி நகரை சேர்ந்த சரவணன் லட்சுமி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சரவணன் சென்னையில் உணவு டெலிவரி பாய் மற்றும் ரேபிடோ ஒட்டி அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது ஆறு வயது மகள் லட்சிதா ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு தற்போது நுரையீரல் வரை பரவியுள்ளதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் 6 முதல் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்பதால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியின் சிகிச்சைக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்களின் வாயிலாக கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் சிறுமியின் சிகிச்சைக்கு முதல்கட்டமாக 25000 ரூபாய் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தர்மராஜ் நிலைய மருத்துவ அதிகாரி சரவணன், குழந்தைகள் பிரிவு மருத்துவ இயக்குனர் நந்தினி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் லட்சுமி கூறும்போது தனது மகள் ரத்த புற்று நோய் என்னும் கொடிய நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்காக நாங்களும் போராடி வருகிறோம்.

எனது கணவருக்கு குறைந்த வருமானம் ஏழ்மையான குடும்பத்தில் இருக்கிற நிலையில் சிறுமியின் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில்ஆறு லட்சம் முதல் 8 லட்ச ரூபாய் செலவாகும் என கூறினர்.

குவியும் பாராட்டுக்கள்


இந்த செய்தியை கேள்விப்பட்ட மதுரையின் அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் முதல் கட்டமாக 25000 ரூபாய் கொடுத்துள்ளார். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மதுரையின் அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் இத்தகைய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த குழந்தைக்கு உதவிட ஜி.பே.9442630815









      Dinamalar
      Follow us