நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கீரைத்துறையில் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் 30 ஆதரவற்ற முதியோர்களுக்கு படிக்கட்டுகள் தன்னார்வல அமைப்பு சார்பில் கம்பளி, போர்வை, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இவ்வமைப்பு 2012 முதல் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி, பிறந்தநாள் கொண்டாட்டம், எச்.ஐ.வி., பாசிட்டிவ், காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு உதவி, முதியோர் நலன் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது.
நேற்று நடந்த நிகழ்வில் நிறுவன தலைவர் மலைச்சாமி தலைமையில் தன்னார்வலர்கள் ஷான்ராஜ், சிலம்பரசன், கவினேஷ், சந்தோஷ் உதவி வழங்கினர்.