/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு ஊழியர் சங்கத்திற்கு நிலம் ஒதுக்க வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி
/
அரசு ஊழியர் சங்கத்திற்கு நிலம் ஒதுக்க வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி
அரசு ஊழியர் சங்கத்திற்கு நிலம் ஒதுக்க வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி
அரசு ஊழியர் சங்கத்திற்கு நிலம் ஒதுக்க வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி
ADDED : டிச 26, 2024 11:51 PM
மதுரை:புதுக்கோட்டையில் தமிழக அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
அச்சங்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் தாக்கல் செய்த மனு:
எங்கள் சங்கத்திற்கு புதுக்கோட்டையில் 8.54 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்காக ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 89 செலுத்துமாறு வனம் மற்றும் மீன்வளத்துறை 1983ல் உத்தரவிட்டது. அதை செலுத்தத் தவறியதால், 1999ல் நில ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
தொகையை 10 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். நிலத்தை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலித்து புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டை தாசில்தார் நிராகரித்து உத்தரவிட்டார். அது சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. மனுதாரருக்கு ஒதுக்கீடு செய்த நிலம் ரத்து செய்யப்பட்டது. நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நில மதிப்பு 41 ஆண்டுகளுக்கு பின் அதிகரித்துள்ளது. மனுதாரருக்கு நிலத்தை ஒதுக்க முடியாது. நிராகரித்த உத்தரவில் குறைபாடு அல்லது சட்ட விரோதம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.