/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெற்களம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
நெற்களம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
நெற்களம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
நெற்களம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : நவ 01, 2024 05:14 AM
மதுரை: மேலுார் அருகே தெற்குத்தெருவில் நெல் உலர்த்தும் களம் அமைப்பதற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தெற்குத் தெரு மோகன் அம்பலம் தாக்கல் செய்த பொதுநல மனு:
தெற்குத் தெருவில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் கல்வெட்டாங்குழி பெயரில் அரசு புறம்போக்கு நிலம் இருந்தது. அதிலிருந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
அதன் ஒரு பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. மீதி இடத்தில் தெற்குத் தெரு ஊராட்சி சார்பில் நெல் உலர்த்தும் சிமென்ட் களம் அமைக்கப்படுகிறது.
அரிசி ஆலை நடத்தும் தலைவரின் உறவினர் ஒருவருக்காக களம் அமைக்கப்படுகிறது. பொதுநலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிதியை தனிநபர் நலனிற்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
களம் அமைக்க தடை விதிக்க வேண்டும். அந்நிலத்தை வேறு பொது நோக்கத்திற்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: அப்பகுதியை மேலுார் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்து அறிக்கை தர இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அங்கு கால்நடை மருத்துவமனை அமைக்க குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவுப்படி மருத்துவமனை அமைக்கப்பட்டது. மீதி நிலத்தில் களம் அமைக்கப்பட்டது என அறிக்கை சமர்ப்பித்தார். மனுதாரர் கோரும் நிவாரணம் நிலைக்கத்தக்கதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.