/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள்இன்சூரன்ஸ் நிதி பராமரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ADDED : ஜூலை 01, 2025 03:49 AM
மதுரை: அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் இன்சூரன்ஸ் நிதியை பராமரிக்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்செந்துார் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்த விலக்களித்து 1971 ல் போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்தது. ஒவ்வொரு போக்குவரத்துக் கழகமும் விபத்து இழப்பீட்டிற்கு தனி தொகையை மாதந்தோறும் ஒதுக்கி பராமரிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதை நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. விபத்து வழக்குகளில் நீதிமன்றங்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாலும், போக்குவரத்துக் கழகங்கள் வழங்குவதில்லை.
பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. இன்சூரன்ஸ் டெபாசிட் தொகையை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
மாதந்தோறும் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
அதை முறையாக பராமரித்து இழப்பீடு வழங்க போக்குவரத்துக் கழகங்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.