/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சேவை பெறும் உரிமைச்சட்டம் அமல்படுத்த வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மார் 05, 2024 05:26 AM
மதுரை : பொது சேவைகள் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சி பகளவாடி குருநாதன் 2021 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: பொது சேவைகள் பெறும் உரிமைச் சட்டம் 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் காலவரம்பை அம்மாநிலங்கள் பின்பற்றுகின்றன. உதாரணமாக ரேஷன் கார்டு வழங்க பல மாநிலங்கள் 30 நாட்கள் காலவரம்பு நிர்ணயித்துள்ளன. ஹரியானாவில் 15 நாட்களில் ரேஷன் கார்டு, எட்டு நாட்களில் மின் இணைப்பு, ஏழு நாட்களில் ஜாதிச் சான்று, நிலப்பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கு ஒரே நாள், குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பிற்கு 12 நாட்கள் என குறைந்த காலவரம்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தவிர்க்க பொது சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி மும்மினேனி சுதீர்குமார் அமர்வு: மனுதாரர் தரப்பிற்கு சில முறை வாய்ப்பளிக்கப்பட்டது. அவரது தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

