/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புயல் காப்பகங்கள் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
புயல் காப்பகங்கள் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
புயல் காப்பகங்கள் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
புயல் காப்பகங்கள் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூலை 08, 2025 03:25 AM
மதுரை: ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் புயலிலிருந்து மக்களை பாதுகாக்க பல்நோக்கு தங்கும் மையங்கள் அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரம் மோர்ப்பண்ணை திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 2018 ல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. எங்கள் மீனவ கிராமத்தில் புயலின் போது மக்களை பாதுகாக்க காப்பகம், பல்நோக்கு சேவை மைய கட்டடம் இல்லை.
ராமநாதபுரம் கடற்கரை பகுதிகளான மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, புதுப்பட்டினம், காரங்காடு, லங்கியாடி, சோழியகுடி, தொண்டி, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், ஓலைகுடா, தண்ணீர் ஊத்து, கரையூரில் புயலிலிருந்து மக்களை பாதுகாக்க பல்நோக்கு தங்கும் மையங்கள் அமைக்க வேண்டும். மோர்ப்பண்ணையில் கலங்கரை விளக்கம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசுபீளிடர்திலக்குமார் தெரிவித்ததாவது:பாம்பன், ராமேஸ்வரம், பாசிப்பட்டிணத்தில் கலங்கரை விளக்கங்கள் உள்ளன. புயலின்போது மக்களை பாதுகாக்க 23 இடங்களில் காப்பகங்கள் உள்ளன என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தேசிய புயல் அபாய குறைப்புத் திட்டம்(என்.சி.ஆர்.எம்.பி.,) தமிழகத்திற்கு பொருந்தாது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

