/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிலம் ஒதுக்கவில்லை உயர்நீதிமன்றத்தில் தகவல்

ADDED : டிச 01, 2024 04:21 AM
மதுரை : மதுரை கருப்பாயூரணி கணேசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
காளிகப்பானில் (பிட்2) குறிப்பிட்ட சர்வே எண்ணில் தினசரி காய்கறி சந்தை, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார மையம், வி.ஏ.ஓ., அலுவலகம், சிறார் பூங்கா, நுாலகம் அமைந்துள்ளன. இவற்றை அகற்றிவிட்டு சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
கைவிட வலியுறுத்தி பதிவுத்துறை செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: காய்கறி சந்தை உள்ளிட்ட பிற அரசு கட்டடங்களை இடிக்க அனுமதிக்கக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் அச்சப்படுவது தவறானது என அரசு தரப்பு தெரிவித்தது.
இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.