/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஆக 30, 2025 04:05 AM
மதுரை: கன்னியாகுமரி கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
நாகர்கோவில் செலஸ்டின் தாக்கல் செய்த பொதுநல மனு:
கன்னியாகுமரியில் வீடுகள், ஓட்டல்கள், லாட்ஜ்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மீனவர்கள் வாழும் கடற்கரை பகுதியில் கலக்கிறது. மக்களுக்கு நோய் பரவுகிறது. சிலர் இறந்துள்ளனர். இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலருக்கு புகார் அனுப்பினோம்.
கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாமனன் ஆஜரானார். நீதிபதிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், கன்னியாகுமரி கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.