/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் சொத்துகளை பாதுகாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
கோயில் சொத்துகளை பாதுகாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கோயில் சொத்துகளை பாதுகாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கோயில் சொத்துகளை பாதுகாக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஜூலை 31, 2025 06:17 AM
மதுரை, : தமிழக கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தாக்கலான வழக்கில் அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் கீழக்கோட்டை கிராமத்தில், விநாயகர், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில்கள் உள்ளன. அக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பே வருவாய்த்துறை அதிகாரிகள் அந்நிலங்களுக்கு பட்டா வழங்கியுள்ளனர். 'கோயில்களில் பூஜாரிகள் தான் பரம்பரை அறங்காவலர்கள்' என 1972ல் அறநிலையத்துறை அறிவித்தது. அப்போது முதல் கோயில்களையும், தானமாக வழங்கப்பட்ட நிலங்களையும் பூஜாரிகளே நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயில்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள் அதன்பெயரிலேயே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை. தற்போது கோயில் நிலங்கள் தனி நபர்கள் பெயரில் ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் ஏராளமான கோயில் சொத்துகள் தொடர்ந்து மோசடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கோயில் சொத்துகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளீட் அமர்வு விசாரித்தது. அறநிலையத்துறை 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.