/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டிவி' தொடர்களை கட்டுப்படுத்ததணிக்கைக்குழு அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : டிச 11, 2024 06:42 AM
மதுரை,: 'டிவி' தொடர்கள், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக் குழு அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் ஆரோக்கியமானவை அல்ல. குடும்பத்தை கெடுப்பது, விவாகரத்து செய்வது, பழிவாங்குவதுதான் இடம்பெறுகிறது. பார்வையாளர்கள் மனதில் தவறான எண்ணங்கள் விதைக்கப்படுகிறது. சில நிகழ்ச்சிகளில் வக்கிரமான, வன்முறை கருத்துக்கள் இடம்பெறுகின்றன. பாலியல் தொடர்பான படங்கள் திரையிடப்படுகின்றன.
இவை நம் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளன. கேளிக்கை என்ற பெயரில் மக்களை தவறாக வழிநடத்தக்கூடாது. இவற்றை ஒழுங்குபடுத்துவது அவசியம். வெள்ளித்திரை போல் தணிக்கைக் குழு இருக்க வேண்டும்.
'டிவி' நிகழ்ச்சிகள், தொடர்கள், செய்தி ஒளிபரப்புகளுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டும்.
அனைத்து 'டிவி' தொடர்கள், விளம்பரங்களை கட்டுப்படுத்த தணிக்கைக் குழு அமைக்க வேண்டும். வன்முறை காட்சிகள் இடம்பெறும் படங்கள், தொடர்கள், விளம்பரங்களுக்கு தணிக்கைக் குழுவின் சான்று
தொடர்ச்சி 7ம் பக்கம்