/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க குழு அமைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : நவ 23, 2024 05:27 AM

மதுரை; வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க குழு அமைக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:
வைகை ஆற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. குப்பைகள் குவிக்கப்படுகின்றன. இதனால் மாசடைந்துள்ளது. தண்ணீரின் மாதிரியை சோதனை செய்ததில் தரம் குறைந்துள்ளது.
சிறப்புக் குழு அமைத்து கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கழிவு நீர் கலக்கவிடப்படும் பகுதியில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். வைகையை மாசுபடுத்துவோரிடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும். அத்தொகையை வைகை சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு மத்திய நீர்வளத்துறை, தமிழக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை முதன்மைச் செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.,6 க்கு ஒத்திவைத்தது.