/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 09, 2024 04:18 AM
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனு: வாடிப்பட்டி அருகே சரந்தாங்கியில் பெரிய ஓடை உள்ளது.
அதில் நீர்வழிப்பாதையை தடுக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றிவிட்டு, ஓடையை மீட்கக்கோரி கலெக்டர், வாடிப்பட்டி தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை
எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: நீர்நிலை சாலையாக மாற்றப்பட்டுள்ளதில் அதிருப்தியடைகிறோம்.
ஓடையை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர அக்.14வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. மீட்கப்பட்டதற்கான போட்டோ ஆதாரங்களை அக்.15 ல் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.