/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிடில் அதிகாரிகள் மீது நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஆக 28, 2025 11:30 PM
மதுரை: நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்றத்தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசுத்துறையின் அதிகாரிகள் சரியாக நிறைவேற்றுவதில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகம் தாக்கலாகின்றன. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தில் தவறான தகவல்களை சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை. நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை குறித்த காலவரம்பிற்குள் நிறைவேற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசாணை பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் 2024 அக்.20 ல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இதை மனுதாரர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.