/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுவண்டி பந்தயம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாட்டுவண்டி பந்தயம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 02, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மேலுார் அருகே உறங்கான்பட்டி சிவானந்தம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
உறங்கான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.5 ல் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற உள்ளது. அனுமதி, பாதுகாப்பு கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி.,மேலுார் டி.எஸ்.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிபந்தனைகளுக்குட்பட்டு மனுவை ஏப்.3 க்குள் பரிசீலித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.