sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 சவுதி விபத்தில் மரணம் இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

 சவுதி விபத்தில் மரணம் இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 சவுதி விபத்தில் மரணம் இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 சவுதி விபத்தில் மரணம் இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : பிப் 15, 2026 06:32 AM

Google News

ADDED : பிப் 15, 2026 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுதி அரேபியா சாலை விபத்தில் பலியானதற்கு இழப்பீடு கோரிய வழக்கில், மனுவை துாதரக உயரதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

எட்டயபுரம் அருகே மாவில்பட்டி மகாலட்சுமி தாக்கல் செய்த மனு:

எனது கணவர் ஜெயகணேசன் பெருமாள். சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு சாலை விபத்தில் இறந்தார். இழப்பீடு கோரி மத்திய வெளியுறவுத்துறை, உள்துறை செயலர்கள், சவுதி அரேபியாவிலுள்ள இந்திய துாதரகம், டில்லியிலுள்ள சவுதி அரேபியா துாதரக உயரதிகாரிகள், துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பி.சரவணகுமார் ஆஜரானார்.

மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயசிங், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணி: மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சவுதி அரேபியாவிலுள்ள இந்திய துாதரகம், டில்லியிலுள்ள சவுதி அரேபியா துாதரக உயரதிகாரிகள் மனுவை சட்டப்படி பரிசீலித்து இயன்றவரை விரைவாக 12 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us