/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆன்லைனில் பட்டாசு விற்பனைதடை கோரி வழக்கு கோர்ட் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : செப் 05, 2025 03:38 AM
மதுரை: ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்கு தடை கோரிய வழக்கில், சைபர் கிரைம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜா சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதை மீறி பட்டாசு விற்பனை, முன்பதிவு செய்ய சமூக ஊடகங்கள் மற்றும் இதர வலைத்தளங்களில் சட்டவிரோதமாக விளம்பரப்படுத்துவது தொடர்கிறது. அதை தடை செய்ய வலியுறுத்தி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு ஆஜரானார். மத்திய, மாநில அரசுகள் தரப்பில்,'ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி,'மனுதாரர் சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க வேண்டும். அவர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.