/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் நிலத்தில் குடியிருப்பு எதிரான வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 04, 2025 01:27 AM
மதுரை: மதுரை ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மேலுார் அருகே வலையபட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஊழியர்களுக்கான குடியிருப்பு அமைக்கப்படுகிறது. தடுக்கக்கோரி தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், கலெக்டர், மாவட்ட வன அலுவலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பு: அது வனத்துறைக்கு சொந்தமான நிலம் அல்ல. கோயிலுக்கு சொந்தமான நிலம். அர்ச்சகர்களுக்கு குடியிருப்பு, குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. மனுதாரர் உள்நோக்குடன் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.