/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டுவேலை தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூலை 30, 2025 12:32 AM
மதுரை : வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற தாக்கலான வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் சீதாலட்சுமி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 18 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் நலனை பாதுகாக்க சட்டம் இல்லை. சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. 2008 ல் மகாராஷ்டிரா அரசு வீட்டு வேலை செய்பவர்கள் நல வாரிய சட்டம் இயற்றியது. குழந்தைகளுக்கான நிதி உதவி, மருத்துவ செலவு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
வீட்டு வேலை செய்பவர்களை முறைப்படுத்த கேரளா அரசு 2022 ல் சட்டம் இயற்றியது. தமிழகத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு சிறப்புச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தலைமைச் செயலர், தொழிலாளர் நலத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் ஆஜரானார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: இதில் நீதிமன்றம் தலையிட்டு சாதகமான உத்தரவு பிறப்பிக்க இயலாது. மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.