/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புஆய்விற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 26, 2025 01:23 AM
மதுரை: மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:
மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை சிலர் ஆக்கிரமித்து கடைகளை நடத்துகின்றனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் ஏற்படுகின்றன. கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் அனுப்பினேன். பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: பஸ் ஸ்டாண்ட் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஆய்வு செய்து அடுத்தவாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.