தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

மின்சாரம் தாக்கி பலி இழப்பீடு கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : அக் 20, 2026 05:58 PM

ADDED : அக் 20, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 05:58 PM ADDED : அக் 20, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது மகன் 2023 ல் மின்சாரம் தாக்கியதில் இறந்தார். இழப்பீடு கோரி மதுரை மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், சோழவந்தான் உதவி பொறியாளருக்கு 2024 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு:

ஒரு சட்டப்பூர்வ அதிகாரியிடம் மனு அளிக்கும்போது தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பது, கடமை தவறிய செயலாக கருதப்படும். மனுதாரரின் மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு கண்காணிப்பு பொறியாளர் 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us