/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒத்தக்கடை பள்ளி அருகே போலீஸ் அவுட்போஸ்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஒத்தக்கடை பள்ளி அருகே போலீஸ் அவுட்போஸ்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒத்தக்கடை பள்ளி அருகே போலீஸ் அவுட்போஸ்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஒத்தக்கடை பள்ளி அருகே போலீஸ் அவுட்போஸ்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 02:54 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி அருகே தற்காலிகமாக போலீஸ் அவுட்போஸ்ட் நிறுவ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை சாந்தமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு:
உலகனேரியில் ஒத்தக்கடை அரசு பெண்கள்மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து பஸ் ஸ்டாப்பிற்கு வரும் மாணவிகளை சிலர் கேலி, கிண்டல் செய்கின்றனர். வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மாணவிகள் அச்சப்படுகின்றனர்.
பாதுகாப்பு கருதி காலை பள்ளி துவங்கும் நேரம், மாலை பள்ளி முடியும் நேரத்தில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அருகே போலீஸ் 'அவுட்போஸ்ட்' அமைக்க வேண்டும் என கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
தற்காலிகமாக அவுட்போஸ்ட் அமைக்க வருவாய்த்துறையினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தேர்வு செய்துள்ள இடத்தில் தற்காலிக அவுட்போஸ்ட்டை ஜூன் 23க்குள் நிறுவ வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து ஜூன் 24ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.