/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 08, 2024 04:53 AM
மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மானகிரியில் ஊருணி, ஓடை, கோயில் நிலம் உள்ளது. அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கழிவுநீர் தேங்குகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊருணியை துார்வார வேண்டும். பூங்காவுடன் நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வலியுறுத்தி கலெக்டர், பொதுப்பணித்துறை பெரியாறு-வைகை பாசன செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 மாதங்களில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.