/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உத்தப்புரம் கோயிலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
உத்தப்புரம் கோயிலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
உத்தப்புரம் கோயிலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
உத்தப்புரம் கோயிலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 22, 2025 05:51 AM
மதுரை : 'மதுரை உத்தப்புரம் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம்,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
உத்தப்புரம் பாண்டி தாக்கல் செய்த மனுவில், ''கிராமத்தில் முத்தாலம்மன் - மாரியம்மன் கோயில்கள் உள்ளன. பங்குனி, புரட்டாசி திருவிழாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தோர் கோயில், திருவிழாவை நடத்துகின்றனர். 2010ல் இரு சமூகத்தினருக்கிடையே பிரச்னையால் விழா நடக்கவில்லை. 9 ஆண்டுகளாக கோயில் பூட்டப்பட்டது. கோயிலில் பூஜை செய்ய உத்தரவிட வேண்டும்,'' என கூறியிருந்தார்.
இம்மனுவை தனி நீதிபதி விசாரித்து கோயிலை திறந்து தினமும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவின் பேரில் கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்காததால் மதுரை கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு சமூகத்தினர் சார்பில் 'உத்தப்புரம் கோயிலில் அனைவரும் சம உரிமையுடன் கோயிலில் வழிபடுவோம், தல விருட்ச மரத்தை வழிபடுவதில் புதிய முறைகள் புகுத்த மாட்டோம்' என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள்: உத்தப்புரம் கோயில் வழிபாட்டில் அரசு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது. அனைத்து சமூகத்தினரும் எவ்வித வேறுபாடும் இன்றி தரிசனம் செய்யலாம். அறநிலையத்துறை விதிகளுக்கு உட்பட்டு கோயில் தல விருட்சத்தை யாரும் தொடாமலும், சந்தனம், குங்குமம் வைப்பது, ஆணி அடிப்பது போன்றவை செய்யாமல் வழிபட வேண்டும். இது தொடர்பாக புதிய வழிமுறைகளை உருவாக்கி அதை விளம்பரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.