sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 மானாமதுரை ஆகாஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம் போராட்டத்தை முடிக்க ஐகோர்ட் உத்தரவு

/

 மானாமதுரை ஆகாஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம் போராட்டத்தை முடிக்க ஐகோர்ட் உத்தரவு

 மானாமதுரை ஆகாஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம் போராட்டத்தை முடிக்க ஐகோர்ட் உத்தரவு

 மானாமதுரை ஆகாஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம் போராட்டத்தை முடிக்க ஐகோர்ட் உத்தரவு


ADDED : மார் 13, 2026 02:03 AM

Google News

ADDED : மார் 13, 2026 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், போலீஸ் விசாரணையில், ஆகாஷ் டெலிசன் மரணமடைந்த விவகாரத்தில், 'கொலை மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டம் பிரிவுகளில், சி.பி.சி.ஐ.டி., வழக்கு பதிவு செய்துள்ளது' என, அரசு தரப்பு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.

இதனால், போராட்டக்காரர்கள் மானாமதுரை நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து காலி செய்து கொள்ள, நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கை, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி நேற்று விசாரித்தார். அப்போது, ஆகாஷின் தாய், 'மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

நீதிபதி, 'கண்களை கட்டி தாக்கினர். யார், யார் தாக்கினர் என ஆகாஷ் டெலிசன் கூறவில்லை. அரசு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.

'போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பிரேத பரிசோதனை செய்த உடலை எடுத்துச் செல்ல வேண்டும்' என்றார்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், 'நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டக்காரரர்கள் தொடர்கின்றனர்.

'இவர்களால் போக்குவரத்து பாதித்துள்ளதால், அவர்களை அப்புறப்படுத்துமாறு வேறு சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்' என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

போராட்டக்காரர்கள் நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து வெளியேற வேண்டும். அவர்கள் விரும்பினால் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடரலாம்.

இதை நிறைவேற்றாத பட்சத்தில் நான்குவழிச்சாலை சந்திப்பிலிருந்து போராட்டக்காரர்களை அகற்ற, போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர சட்டப்படி எஸ்.பி., நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us