sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அமைச்சருக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம்

/

 அமைச்சருக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம்

 அமைச்சருக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம்

 அமைச்சருக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றம்


ADDED : மார் 13, 2026 02:01 AM

Google News

ADDED : மார் 13, 2026 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 'எப்ஸ்டீன்' ஆவணங்களில் பிரதமர் மோடி பெயர் இடம் பெற்றுள்ளதாக அவதுாறு கருத்து வெளியிட்டதற்காக, நடவடிக்கை கோரி, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நீதிப்பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் தி.மு.க., வழக்கறிஞர் ஜோசப்ராஜ் தாக்கல் செய்த மனு: சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தை, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை.

போலீசில் அவதுாறு புகார் அளிக்க சட்டத்தில் வழி இல்லை. வழக்கு தொடர்வதற்கான அனுமதியை, பிரதமரிடம் மனுதாரர் பெறவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்புடைய வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் விசாரிக்க முடியும். இம்மனு நிலைக்கத்தக்கதல்ல. தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜோசப்ராஜ் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ''அவதுாறு வழக்கை, சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும். பாதிக்கப்பட்டதாக கருதினால், சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தான் புகார் செய்திருக்க வேண்டும்,'' என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருப்பதால், இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்படுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us