/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தையை கொலை செய்த தாய், கள்ளக்காதலன் கைது இடையூறாக கருதி கண்மாயில் வீசினர்

ADDED : மார் 12, 2026 05:08 AM

மதுரை: மதுரையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக, ஒன்றரை வயது பெண் குழந்தையை கண்மாயில் வீசி கொன்ற தாய், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் தனலட்சுமி, 21. இவரும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பாண்டிதுரையும் காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் சுபாஷினி என்ற குழந்தை இருந்தது.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மதுரையில் உள்ள தந்தை வீட்டிற்கு குழந்தையுடன் வந்த தனலட்சுமி, தந்தையின் கூழ் கடையில் வியாபாரம் செய்தார்.
அப்போது வெங்காய மண்டியில் வேலை பார்க்கும் பூதக்குடி அழகர், 19, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். குழந்தையின்றி வந்தால் திருமணம் செய்து வைப்பதாக அழகரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனால் காதலுக்கு இடையூறு எனக்கருதி, தனலட்சுமி தான் பெற்ற குழந்தையை குருந்தங்குளம் அருகே உள்ள பேச்சிக்குளம் கண்மாயில் வீசி கொலை செய்தார். தனலட்சுமியின் தந்தை குழந்தை குறித்து கேட்ட போது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தவர், பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.அழகர், தனலட்சுமியை ஊமச்சிக்குளம் போலீசார் கைது செய்தனர்.