/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை
/
நிலுவை வழக்குகள் தீர்வுக்கு ஐகோர்ட் யோசனை
ADDED : ஆக 19, 2025 01:36 AM
மதுரை; 'கீழமை நீதிமன்றங்களில், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தனி ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
கீழமை நீதிமன்றங்களில், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையிலுள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி தீர்வு காணும் முன்னோடி திட்டத்தை இந்நீதிமன்றம் செயல்படுத்துகிறது.
இதன்படி, நிலுவை வழக்குகளை குறைக்க, விரைவாக விசாரிக்க வேண்டிய தகுதியான வழக்குகளை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனின் அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளின் பட்டியலை தயாரித்து, அரசு வழக்கறிஞர்கள் மூலம் இவ்விவகாரத்தை கையாள காவல்துறை நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதற்காக, தனி ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிப்பது குறித்து டி.ஜி.பி., பரிசீலிக்கலாம்.
எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்கள் மேற்பார்வையிட்டு, இந்நீதிமன்றத்திற்கு விரைவாக தகவல் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.