/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உள்ளாட்சி் தேர்தலில் 'நோட்டா' ; விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
/
உள்ளாட்சி் தேர்தலில் 'நோட்டா' ; விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
உள்ளாட்சி் தேர்தலில் 'நோட்டா' ; விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
உள்ளாட்சி் தேர்தலில் 'நோட்டா' ; விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : ஜூலை 09, 2025 07:43 AM
மதுரை : உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச் சீட்டில் 'நோட்டா' இடம்பெற தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
வினோத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச் சீட்டில் 'நோட்டா'விற்கான சின்னம் இடம்பெற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், அரசு தரப்பில் பீளீடர் திலக்குமார் ஆஜராகினர். மாநில அரசு, மாநில தேர்தல் ஆணையத்திடம் விபரம் பெற்று வழக்கறிஞர் அடுத்தவாரம் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.