/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில் சொத்து ஆவணம் பராமரிப்பு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
/
கோயில் சொத்து ஆவணம் பராமரிப்பு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
கோயில் சொத்து ஆவணம் பராமரிப்பு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
கோயில் சொத்து ஆவணம் பராமரிப்பு விபரம் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : அக் 31, 2025 02:47 AM
மதுரை:  கரூர் மாவட்ட 10 கோயில்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் சொத்து ஆவணங்கள் எப்படி பராமரிக்கப்படுகிறது என்ற விபரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
கரூர் கல்யாண பசு பதீஸ்வர சுவாமி கோயில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணா சுவாமி கோயில், நெரூர் அக்னீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 64 கோயில் களுக்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
சொத்துக்களை மீட்கக்கோரி தமிழக வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை செயலர்கள், அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப் பிட்டார்.
செப்.,22ல் இரு நீதி பதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கரூர் மாவட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்பு களை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை, நிலத்தின் தற்போதைய நிலை விபரங்களை அறநிலையத்துறை கமிஷனர், கலெக்டர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என 2015ல் கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை மாயமானதை கண்டுபிடித்து தாக்கல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 20 கோயில்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்: வருவாய், அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 கோயில்களின் சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பாக ஒட்டு மொத்த மாவட்ட நிர்வாகமும் அதில் கவனம் செலுத்தியது. மீதம் 10 கோயில்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய ஆய்வு நடக்கிறது. அவகாசம் தேவை.
இவ்வாறு வாதிட்டனர்.
அவகாசம் அளித்த நீதிபதிகள்,'கோயில் சொத்து ஆவணங்கள் எப்படி பராமரிக்கப்படுகிறது என்ற விபரத்தை நவ.,25ல் தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.

