/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமயநல்லுார் போலீஸ் எல்லையில் நடந்த விபத்துகள் எத்தனை அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : நவ 19, 2024 05:40 AM
மதுரை: மதுரை சமயநல்லுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2018 முதல் 2024 அக்டோபர் வரை நடந்த விபத்துக்களின் விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை பரவை செந்தில்குமார், ''திண்டுக்கல் ரோடு சமயநல்லுார் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்,'' என மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சமயநல்லுார் போலீசில் 2017-21 ல் 293 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 67 பேர் இறந்துள்ளனர்; 211 பேர் காயமடைந்தனர். இது ஆபத்தான நிலை மற்றும் மதுரை- - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பாத்திமா கல்லுாரி- சமயநல்லுார் இடையே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதை காட்டுகிறது.
தடுப்புகளின் இருபுறமும் எதிரொளிப்பான்களை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தடுப்புகள் இருப்பது தெரிவதில்லை. மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு-2) ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும்.
சமயநல்லுார் போலீஸ் எல்லைக்குள் 2018 முதல் 2024 அக்டோபர் வரை நடந்த விபத்துகள், மரணங்கள், காயங்கள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை டி.எஸ்.பி.,இன்று (நவ.19) சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.