/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநிலம் முழுதும் துறைமுகங்களில் புது கட்டணம் நிர்ணயிக்க வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்

ADDED : நவ 09, 2025 05:49 AM
மதுரை: தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளுக்கான வாடகை கட்டணத்தை குறைத்து, மாநிலம் முழுவதும் துறைமுகங்களில் நியாயமான புது கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கன்னியாகுமரி மாவட்டம் துாத்துார் சேசடிமை தாக்கல் செய்த பொதுநல மனு: தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளுக்கு தலா ரூ.1000 துறைமுக பயன்பாட்டு (பால வாடகை) கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது. பிற துறைமுகங்களில் குறைந்த தொகை வசூலிக்கப்படுகிறது. கடன் சுமை, டீசல்விலை உயர்வு, பனிக்கட்டிக்குரிய செலவு, கடல்வளம் குறைவு, பராமரிப்பு செலவு உள்ளிட்ட சிரமங்களை மீனவர் கள் எதிர்கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. மாநிலத்தில் மீனவர்களை சமமாக நடத்தவில்லை.
தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் ரூ.1000 கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். பிற மீன்பிடி துறைமுகங்களைப்போல் கட்டணத்தை குறைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் நியாயமான, சமமான புது கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழக மீன்வளத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிளீட்டஸ் ஆஜரானார். நீதிபதிகள் மீன்வளத்துறை முதன்மை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.11 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.