ADDED : நவ 09, 2025 05:48 AM

மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தன. மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன், ஆடிட்டர் செல்வம் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
போட்டி முடிவுகள் ஆடவருக்கான குரூப் 1, 2, 3 பிரிவுகளில் சி.இ.ஓ.ஏ., பள்ளி ஹேம கார்த்திகேயன், ஹரிசரண், ராகேஷ், குரூப் 4 பிரிவில் இடையப்பட்டி பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா கேசவன், குரூப் 5 பிரிவில் லயன்ஸ் பள்ளி ஆகாஷ் பாண்டியன், குரூப் 6 பிரிவில் ஜெயின் வித்யாலயா அமிழ்தன், குரூப் 7 பிரிவில் சஞ்சய் ராயர் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மகளிருக்கான குரூப் 1, 3, 4 பிரிவுகளில் சி.இ.ஓ.ஏ., பள்ளி அன்னப்பூர்ணா, சுபதக்ஷனா, பவதாரணி, குரூப் 2, 4 பிரிவுகளில் ஜெயின் வித்யாலயா ஏத்தனா ரேச்சல், நைசா சிங், குரூப் 5, 7 பிரிவுகளில் லட்சுமி பள்ளி மோஷிகா, தன்ஷிகா, குரூப் 6 பிரிவில் வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி கோமிஷா ஆனந்தி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
சி.இ.ஓ.ஏ., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ஜெயின் வித்யாலயா பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன.
சங்க மாநிலத் தலைவர் திருமாறன், எஸ்.டி.ஏ.டி. மண்டல முதுநிலை அலுவலர் வேல்முருகன் பரிசு வழங்கினர். நீச்சல் சங்க நிர்வாகிகள் லட்சுமணன், அமிர்தராஜ், வெங்கடேஸ்வரன், வேல்முருகன் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கண்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

