/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையை காப்பாற்ற களம் இறங்கிய உயர்நீதிமன்றம்; 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ்

ADDED : டிச 14, 2024 06:57 AM

மதுரை: வைகை ஆற்றை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு:
வைகை ஆற்று நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பயனடைகின்றன. இவற்றில் வைகை பயணிக்கும் 260 கி.மீ., துாரத்தில் 177 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலக்கின்றன. கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்காமல் கழிவு நீரை வெளியேற்றுவதால் வைகை ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வைகை பயனற்றுப் போகும். மாசுபடுவதை தடுக்க வேண்டும். மாசுபடுத்துவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மதுரை உட்பட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இதுபோல் மற்றொருவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து டிச.16 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.