ADDED : மே 19, 2025 04:47 AM
மதுரை : குலமங்கலம் ரோட்டில் ஆலமரம் வளைவு அருகே வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதால், ஹைமாஸ் விளக்கு அமைக்க அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
மதுரை செல்லுார் - குலமங்கலம் ரோடு மீனாம்பாள்புரம் ஆலமரம் வளைவு அருகே பாலம் உள்ளது. அதன் நடைபாதை ரோட்டை விட ஏற்றமாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பல நாட்களாக எரியாததால், எப்போதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் வேகமாக வரும் வாகனங்கள் பாலத்தின் மேடான நடைபாதையில் மோதி விபத்தில் சிக்குகின்றன.
பாலத்தின் ஓரங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் சில நேரங்களில் உயிர்பலியும் ஏற்படுகின்றன. அப்பகுதியினர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகள் பாலத்தின் ரோட்டை நடைபாதை உயரத்திற்கு சமமாக அமைக்க வேண்டும்.
விபத்துகளை தவிர்க்க ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்'' என்றனர்.