/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜாதி சான்றிதழ் வழங்க விசாரணைக் குழு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்
/
ஜாதி சான்றிதழ் வழங்க விசாரணைக் குழு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்
ஜாதி சான்றிதழ் வழங்க விசாரணைக் குழு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்
ஜாதி சான்றிதழ் வழங்க விசாரணைக் குழு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்
ADDED : டிச 09, 2024 05:34 AM

வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் காட்டுநாயக்கன் ஜாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் தொடர் பள்ளி புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டில்லி பாபு நேரில் சந்தித்து பேசினார். பின் அவர் கூறியதாவது:
104 அரசாணைப்படி பெற்றோருக்கு சான்றிதழ் இருந்தால் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். ஆர்.டி.ஓ., கலெக்டர் தர மறுக்கின்றனர்.
ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், ஹிந்து காட்டுநாயக்கன் சமூகத்தின் சார்பில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஜாதிச் சான்றிதழ் பெறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். இது தொடர்பாக முதல்வர், ஆணைய தலைவர்கள், செயலாளர்களை சந்திக்க உள்ளேன்.
கலெக்டர், அமைச்சர் மூர்த்தி ஐந்து பேர் குழு அமைத்து விசாரணைப்படி சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறியதை நான் கண்டிக்கிறேன்.
இது மக்களை ஏமாற்றக்கூடிய செயல். புதிய இடத்தில், புதிய இனத்திற்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க விசாரணை நடத்தலாம், குழுக்கள் போடலாம். ஆனால் ஏற்கனவே 2 தலை முறைகளுக்கு வழங்கிய சான்றுகளை 3ம் தலைமுறைக்கு வழங்க விசாரணை தேவையில்லை. ஐவர் விசாரணை குழு விஷயத்தில் அமைச்சர், முதல்வர் தலையிட்டாலும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.