/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேல் வழிபாட்டு நிகழ்ச்சி இந்து முன்னணி அழைப்பு
/
வேல் வழிபாட்டு நிகழ்ச்சி இந்து முன்னணி அழைப்பு
ADDED : டிச 01, 2024 01:53 AM
வேல் வழிபாட்டு நிகழ்ச்சி
இந்து முன்னணி அழைப்பு
தாராபுரம், டிச. ௧-
தாராபுரத்தில் நடக்கவுள்ள வேல் வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, இந்து முன்னணி சார்பில், மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: கொங்கு மண்டலத்தின் ஏழு திருத்தலங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கள வேலானது, நாளை மறுதினம் தாராபுரம் கொண்டு வரப்படுகிறது. அன்று மதியம், 3:30 மணியளவில், பைரவன் கோவில் வீதியில் நடக்கும் மங்கள வேல் பூஜையை, இந்து அன்னையர் முன்னணி மாவட்ட நிர்வாகி நளினி நடத்துகிறார்.
இதில் பங்கேற்கும் பக்தர்கள், தங்கள் கைகளால் வேலுக்கு அபிஷேகம் செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை வானதி சோமசுந்தரம், ராதாமணி ஆறுக்குட்டி ஆகிய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.