sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருட்டு டூ - வீலர்களை வாங்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி கைது

/

திருட்டு டூ - வீலர்களை வாங்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி கைது

திருட்டு டூ - வீலர்களை வாங்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி கைது

திருட்டு டூ - வீலர்களை வாங்கிய ஹிந்து முன்னணி நிர்வாகி கைது


ADDED : ஜூன் 18, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் திருடிய டூ - வீலர்களை, குறைந்த விலைக்கு வாங்கி விற்ற நாமக்கல் பா.ஜ., ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை புதுார் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தினேஷ்வரன், 33, என்பவர் ஓட்டிவந்த வாகனத்திற்கு ஆவணங்கள் இல்லை. விசாரணையில், அவர் மதுரை புதுார், தல்லாகுளம் பகுதிகளில் டூ - வீலர்களை திருடி வந்தது தெரிந்தது.

திருடிய டூ - வீலர்களை குமாரபாளையம் ஹிந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி, 32, வட்டமலை பகுதி இளைஞரணி பொறுப்பாளர் கவுதம், 23, பா.ஜ., தரவு மேலாண்மை மாவட்ட துணைத்தலைவர் விவேக்பாலாஜி, 40, ஆகியோரிடம் கேட்ட விலைக்கு தினேஷ்வரன் விற்று வந்துள்ளார்.

திருட்டு டூ - வீலர்களை பாலாஜி உள்ளிட்டோர் 'சர்வீஸ்' செய்து, நாமக்கல் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர். நான்கு பேரையும் மதுரை போலீசார் கைது செய்து, 13 டூ - வீலர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us